முகப்பு
செய்திகள்

‘மாவீரன்' யோகி பாபு பாணியில் பதிவிட்ட விக்ரம்: காரணம் என்ன தெரியுமா?

தங்கலான் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக எக்ஸில் புகைப்படம் பகிர்ந்துள்ளார் நடிகர் விக்ரம். 

Updated On : 17 டிசம்பர் 2023, 11:46 am IST
பகிர்:

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. 

இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில் “விடுபட்ட டப்பிங் பணிகளை முடித்தாகிவிட்டது. பின்குறிப்பு- டீசரில் வசனமில்லைப்பா” எனப் பதிவிட்டுள்ளார். 

சிவகார்த்திகேயன் படமான மாவீரனில் பேட்ச் ஒர்க் வசனம் யோகி பாபு கூறி மிகவும் டிரெண்டானது. இதை விக்ரம் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.