கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்தின் புதிய விடியோ!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா படத்தின் புதிய ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா படத்தின் புதிய ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது.
தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்த மாமன்னன் படம் வெளியாகி கலவையான விமிரிசனங்களைப் பெற்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்துள்ள படம் 'ரகு தாத்தா'. ஃபேமிலி மேன் எனும் விருது பெற்ற படைப்பிற்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒய். யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: பிக்பாஸில் விசித்ராவின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில், ரகு தாத்தா படத்தின் புதிய ப்ரோமோ விடியோவை படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.