இலக்கியா தொடரில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா தொடரில் இருந்து விலகிய முக்கிய பிரபலம் ஒருவர் விலகியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா தொடரில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகியுள்ளார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இளைய தலைமுறையினரையும் தொடர்கள் கவர்ந்துள்ளது.
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே தொடரின் மூலம் பிரபலமானவர் ஹேமா பிந்து. இவர் இத்தொடரில் நடித்து அதிக ரசிகர்களை பெற்றார்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, தற்போது இவர் இலக்கியா தொடரில் சஹானா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடரில் இவருக்கு ஜோடியாக நந்தன் லோகநாதன் நடிக்கிறார்.
இலக்கியா தொடரில், ரூபாஸ்ரீ, சுஷ்மா நாயர், காயத்ரி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தில் மிஸ்டர் மனைவி தொடர்!
இந்த நிலையில், இலக்கியா தொடரில் இருந்து ஹேமா பிந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.