பொன்னியின் செல்வன் காலண்டர் வெளியீடு!
பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ள மாதக் காலண்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ள மாதக் காலண்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்றது.
விக்ரம், ஜெயம் ரவி, காா்த்தி, த்ரிஷா, ஐஸ்வா்யா ராய், ஐஸ்வா்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமாா், பாா்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், லால் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் மட்டும் ரூ. 500 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | கொதித்தெழுந்த அஷீம்: ‘டிக்கெட் டூ ஃபைனல்’ கைப்பற்றப்போவது யார்?
தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, புத்தாண்டை முன்னிட்டு படத்தின் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் கொண்ட‘நாம் 2023’ என்ற மாத காலண்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த காலண்டர் வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி, ரஹ்மான், ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.