செய்திகள்

‘பரிதாபங்கள்’ கோபி-சுதாகர் இணையும் திரைப்படம் பற்றி அறிவிப்பு! 

பிரபல யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர் இணைந்து நடிக்கும் புதிய படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

பரிதாபங்கள் எனும் யூடியூப் சேனலின் மூலம் மக்களிடையே பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இந்த சேனலுக்கு 43.3 இலட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட ‘வடக்கு ரயில் பாவங்கள்’ மிகவும் வெற்றி பெற்றது. சமூக வலைதளங்களில் இவர்களது மீம்ஸ், புகைப்படங்கள் என அடிக்கடி டிரெண்டிங்கில் இருக்கும் பிரபலங்கள். 

பரிதாபங்கள் புரடக்‌ஷனில் உருவாகும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் அறிவிக்கப்படவில்லை. கோபி, சுதாகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தினை விஷ்ணு விஜயன் இயக்குகிறார். 

இந்தப் படத்தில் விடிவி கணேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, கோதண்டன், சுபத்ரா ராபர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை- சரத் ஜே. ஒளிப்பதிவு- சக்திவேல் , கே.பி. ஸ்ரீ. 

இந்த அறிவிப்பை ஒரு டீசரின் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. இதில் இருவரும் சார்லி சாப்ளின் மாதிரி வேடமிட்டுள்ளனர். இதனால் ‘நகைச்சுவையான படமாக  இருக்கும்’ எனவும் ‘வேற லெவல அப்டேட் அண்ணா’ ‘காத்திருக்கிறோம்’ எனவும்  ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

காலமானாா் பி.சேகா் விஜயபாஸ்கா்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

மாநிலங்களவைச் செயலகத்தின் செயல்பாடுகளை குடியரசுத் துணைத் தலைவா் மீளாய்வு

மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 512 மனுக்கள்

SCROLL FOR NEXT