வெளியானது ஆலியா பட்-ரன்வீர் பட டிரைலர்: சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் தழுவலா?
பாலிவுட் பிரபலங்களான ஆலியா பட், ரன்வீர் சிங் நடித்துள்ள புதிய படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இது சூர்யா படத்தின் கதையை நியாபகப்படுத்துகிறது.
ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவர் கரண் ஜோஹர். ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் எடுத்த கே2ஹெச்2 எனும் குச் குச் ஹோடா ஹேய் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. பின்னர் பல படங்களை தயாரித்து 9 படங்களையும் இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க: சலார் - அதிகாலையில் வெளியாகும் டீசர்.. என்ன காரணம்?
தற்போது பாலிவுட் பிரபலங்களான ஆலியா பட், ரன்வீர் சிங் வைத்து ராக்கி அர் ராணி கி ப்ரேம் கஹானி படத்தினை இயக்கியுள்ளார். வியாகோம் 18, தர்மா புரடக்ஷன் இணைந்து வழங்கும் இந்தப் படத்தின் டீசரை நடிகர் ஷாருக்கான் வெளியிட்டார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இன்ஸ்டாகிராமில் நடிகர் பவன் கல்யாண்!
தற்போது இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் 1999இல் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் கதையை போலவே உள்ளது. அதாவது கதாநாயகன் நாயகி வீட்டிற்கும் கதாநாயகி ஹீரோ வீட்டிற்கும் மாறிச் சென்று அவர்களிடன் நன்மதிப்பை பெற்று திருமணம் செய்து கொள்வதாக இருக்கும். இதனால் இந்தப் படத்தின் கதையும் சூர்யா படம் போல இருப்பதாக சந்தேகம் எழுகிறது.
படக்குழு இந்தப் படம் தழுவல் என எங்கேயும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. இருப்பினும் நகைச்சுவை காட்சிகள் ரசிக்க வைப்பதாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.