மாமன்னன் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
மாமன்னன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மாமன்னன் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல் வெளியானது
Advertisement
Advertisement
மாமன்னன் திரைப்படம் வெளியாகி 9 நாள்களில் ரூ.52 கோடி வசூல் செய்ததாக அமைச்சர் உதயநிதி முன்னதாக தெரிவித்து இருந்தார்.
இதையும் படிக்க: மாவீரன் - வசூலில் அசத்தும் சிவகார்த்திகேயன்!
இந்த நிலையில், மாமன்னன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 27 ஆம் தேதி வெளியாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.