ஓடிடியில் வெளியானது ரெஜினா!
சுனைனா நடிப்பில் உருவான ‘ரெஜினா’ திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது.
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார்.
நீண்ட நாள்களுக்குப் பின் டோமின் டி செல்வா இயக்கத்தில் கதை நாயகியாக ‘ரெஜினா’ படத்தில் சுனைனா நடித்திருந்தார்.
இதில் நிவாஸ் ஆதித்தன், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். பான் இந்தியத் திரைப்படமாக் கடந்த ஜுன் - 23 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சங்களைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: தனுஷ் - 51 படத்தில் இணையும் பிரபலங்கள்!
இந்நிலையில், ரெஜினா அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.