சூர்யாவின் சீன்! ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

நடிகர் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சீன். தீபாவளியை முன்னிட்டு நவ. 6 அன்று திரையரங்குகளில் சீன் திரைப்படம் வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று, வசூல் ரீதியாக வெற்றிப் படமானது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
மேலும், இந்தப் படத்தில் நடிகர் நஸ்லென் மற்றும் நஸ்ரியா ஆகியோரின் பங்களிப்பும் படத்தின் வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்ததால் அவர்களுக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதைப் பின்னணியால் இந்தப் படம் உலக அளவில் ரூ. 260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சீன் திரைப்படம் டிச. 4 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.