FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் இருந்து விலகிய 'ஐஸ்வர்யா': அடுத்து யார்?

பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் இருந்து 'ஐஸ்வர்யா' கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதாக சாய் காயத்ரி தெரிவித்துள்ளார்.

Updated On : 10 மார்ச் 2023, 11:42 am IST
பகிர்:

பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் இருந்து 'ஐஸ்வர்யா' கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதாக சாய் காயத்ரி தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

சிவ சேகர், டேவிட் சார்லி ஆகியோர் இயக்கத்தில் பிரியா தம்பி திரைக்கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உருவாகி வருகிறது. சகோதரர்கள் 4 பேர் மற்றும் அவர்களுக்கு வரும் மனைவிகள் ஆகியோரே பிரதான கதாபாத்திரங்கள். சுஜிதா, ஸ்டாலின், குமரன் தங்கராஜன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

நான்கு ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நிறைய நடிகைகள் மாற்றப்பட்டுள்ளனர். முல்லை கதாபாத்திரத்தில் இதுவரை 3 பேரும், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் 3 பேரும் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி, பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் இருந்து விலகுவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் இருந்து விலகிவுள்ளதால், ஐஸ்வர்யா கதாபாத்திரத்துக்கு அடுத்து நடிக்கவிருப்பது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஏற்கனவே ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே காயத்ரியே மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments