இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்?
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
கப்ஜா
கே.ஜி.எஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையில் உருவாகிருக்கும் பான் இந்தியா திரைப்படம் ‘கப்ஜா’. இந்தப் படத்தில் உபேந்திரா, சுதீப், ஷ்ரேயா முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் மார்ச் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
கண்ணை நம்பாதே
உதயநிதி நடிப்பில் மார்ச் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் 'கண்ணை நம்பாதே'. இதில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் படத்தை இயக்கியுள்ளார்.
கோஸ்டி
குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால், யோகிபாபு, ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி. மனோ பாலா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பிரபலமான நகைச்சுவை நடிகர்கள் பலர் நடித்துள்ள படம்தான் ‘கோஸ்டி’. இப்படம் திரையரங்குகளில் மார்ச் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.