முகப்பு
செய்திகள்

அருள்நிதி - துஷாரா நடிக்கும் 'கழுவேத்தி மூர்க்கன்' குறித்த அப்டேட்!

நடிகர் அருள்நிதி நடிகை துஷாராவுடன் இணைந்து நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

Updated On : 20 மார்ச் 2023, 10:58 am IST
பகிர்:

இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் 2010இல் வெளியான ‘வம்சம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் அருள்நிதி. பின்னர் மௌன குரு, டீமாண்டி காலணி என தனக்கென ஒரு பாதையை ஒருவாக்கி நடித்து வருகிறார் அருள்நிதி. கடந்தாண்டு டீ பிளாக், தேஜாவு, டைரி போன்ற படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

தற்போது திருவின் குரல், டீமாண்டி காலணி-2, கழுவேத்தி மூர்க்கன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கழுவேத்தி மூர்க்கன் படத்தினை ஜெய்ந்தி அம்பேத்கர் தயாரிக்க சை கௌதமராஜ் எழுதி இயக்கியுள்ளார். 

Advertisement

Advertisement

சார்பட்டா பரம்பரை நாயகி துஷாரா விஜயன் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார். முனிஷ்காந்த், சந்தோஷ் பிரதாப், ராஜ சிம்மன் ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில் துஷாரா வங்கி ஊழியராக நடிக்கிறார். படத்தின் தலைப்புக்கேற்றார் போல கொடிய தண்டனையை பற்றி படம் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments