லோகேஷ் கனகராஜ் 
செய்திகள்

படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிய படத் தயாரிப்பு நிறுவனமொன்றை தொடங்கியுள்ளார்.

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிய படத் தயாரிப்பு நிறுவனமொன்றை தொடங்கியுள்ளார்.

இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர். பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற ஹிட் படங்களை லோகேஷ் இயக்கியிருந்தார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது ,லோகேஷ் ‘தலைவர் 171’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அவரே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் G-squad என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படங்களை தயாரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

ஆங்கிக அபிநயம்... சஞ்சிதா ஷெட்டி!

இதைச் செய்யாவிட்டால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை! ஃபிஃபா எச்சரிக்கை!

பண்டிகை ஸ்பெஷல்... ஆக்ருதி அகர்வால்!

SCROLL FOR NEXT