சித்தா இயக்குநருடன் இணையும் விக்ரம்!
நடிகர் விக்ரம் இயக்குநர் சு.அருண்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘சித்தா’ சமீபத்தில் வெளியானது.
குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உருவாகியுள்ள ‘இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையும் படிக்க: தளபதி விஜய் அண்ணா... வைரலாகும் உதயநிதி!
Advertisement
Advertisement
இந்நிலையில், சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாகவும் இப்படத்தின் முதல்கட்ட பணிகள் துவங்கிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோலார் தங்க வயலில் நடந்த உண்மையைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாக உள்ளதாகவும் தகவல்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.