முகப்பு
செய்திகள்

நடிகை லைலாவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் குமரன்!

மாய தோட்டா, வதந்தி போன்ற இணையத் தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் குமரன். இவர் வதந்தி தொடரில் நடிகை லைலாவுடன் நடித்திருந்தார். 

Updated On : 24 அக்டோபர் 2023, 5:04 pm IST
பகிர்:

நடிகர் விஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை லைலாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் குமரன் தங்கராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் (அக். 24) தொடங்கியுள்ள நிலையில், உடன் நடிக்கும் நடிகர்களின் பட்டியலையும் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டிருந்தது.

அதில் நடிகை ஸ்நேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோருடன் நடிகை லைலாவும் நடிக்கவுள்ளார். 

Advertisement

இதனிடையே நடிகை லைலாவுக்கு நடிகர் குமரன் தங்கராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்தவர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முதல் பாகம் முடிந்து, இரண்டாவது பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. 

குமரன் தங்கராஜும் திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் மாய தோட்டா, வதந்தி போன்ற இணையத் தொடர்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர். வதந்தி தொடரில் நடிகை லைலாவுடன் குமரன் நடித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.