சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது குறித்து...
சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான சி. விஜயாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறி, 2021-இல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு பதிவு செய்யப்படட்தைத் தொடர்ந்து அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியது.
இதையடுத்து, கடந்த மார்ச் 21-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. நிகழாண்டு தொடக்கத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு சம்மன் அனுப்பப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் விசாரணைக்காக, சென்னை மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 6) ஆஜராக வேண்டும் என விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை ஏற்கெனவே சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஆஜராகவில்லை.
இதனால், அமலாக்கத்துறை தற்போது மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.