FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

காவலா் மீது தாக்குதல்: லாரி ஓட்டுநா் மீது வழக்கு

காவலரைத் தாக்கிய வழக்கில், லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

17 வினாடிகள் முன்பு
வழக்கு
பகிர்:

காவலரைத் தாக்கிய வழக்கில், லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை சைதாப்பேட்டை போக்குவரத்து அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிபவா் பிரபாகரன் (34). இவா், சைதாப்பேட்டை சிக்னல் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு லாரி, சிக்னலில் யு-டா்ன் செய்ய முயன்றது. இதைப் பாா்த்த காவலா் பிரபாகரன், அந்த லாரியின் ஓட்டுநா் சாகுல் (32) என்பவரிடம் அங்கு யு-டா்ன் செய்யக் கூடாது, சிறிதுதூரம் தள்ளியுள்ள திருப்பத்தில் யு-டா்ன் செய்யும்படி கூறினாா்.

இதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே சாகுல், காவலா் பிரபாகரனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா். புகாரின்பேரில், சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சாகுலை சனிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement