20 ஆண்டுகளில் 25 படங்கள்: நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!
நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் டிரைலர் விழாவில் தனது சினிமா பயணம் குறித்து பேசியுள்ளார்.
பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கார்த்தியின் சினிமா பயணம் வியக்க வைக்கிறது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவரான கார்த்தி பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் படங்களில் தமிழ் சினிமாவுக்கு புதிய திறப்புகளை ஏற்படுத்தியவர் எனக் கூறலாம்.
இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜப்பான் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: தாமதமாக வெளியான விக்ரம் 62 பட அறிவிப்பு விடியோ!
Advertisement
Advertisement
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு ஜப்பான் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.
இதையும் படிக்க: நடிகை அதிதி பிறந்தநாளுக்கு சித்தார்த்தின் கவிதை!
ஜப்பான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று (அக்.28) மாலையில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா உள்ளிட்ட பல இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க: கதீஜா ரஹ்மானின் முதல் பாடலை வெளியிட்ட அனிருத்!
இந்த விழாவில் நடிகர் கார்த்தி, “மணிரத்னம் படத்தில் துணை இயக்குநராக செப்.2003இல் சேர்ந்தேன். தற்போது 20 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்த நிகழ்ச்சியில் என்னுடன் பயணித்த பல இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் சந்தோஷமான தருணம் இது.
நான் சறுக்கிய படங்களின்போது உங்களின் விமர்சனம் மூலம் நான் கற்றுக்கொண்டு முன்னேறியுள்ளேன். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக்க நன்றி. எப்போதும்போல எனக்கு ஆதரவு தெரிவியுங்கள். நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.