ஜெய்பீம் - நீக்கப்பட்ட சண்டைக்காட்சி வெளியானது!
ஜெய்பீம் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட சண்டைக்காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருந்தது. விமா்சன ரீதியாக இந்தப் படம் வரவேற்பைப் பெற்றாலும் பல விவாதங்களையும் ஏற்படுத்தியது.
இருப்பினும், ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற இப்படம் விருதுகளைக் குவித்ததுடன் ஆஸ்கர் தகுதிச்சுற்று வரை முன்னேறி ஆச்சரியப்படுத்தியது.
இதையும் படிக்க: வாடிவாசல் பணிகளில் கவனம் செலுத்தும் வெற்றிமாறன்!
Advertisement
Advertisement
இந்நிலையில், இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட சண்டைக்காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆவணக்கொலையை சூர்யா தடுப்பதுபோன்ற அக்காட்சி வைரலாகிவருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.