சமுத்திரக்கனி இயக்கத்தில் சிரஞ்சீவி?
நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநராக இருந்து நடிகரானவர் சமுத்திரக்கனி. சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நல்ல நடிகராக அறியப்பட்டவர் சாட்டை, அப்பா போன்ற படங்கள் மூலம் மேலும் பிரபலமடைந்தார். தற்போது, தெலுங்குப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் இயக்கத்தில் தமிழில் வெளியான வினோதய சித்தம் படத்தை தெலுங்கில் பவண் கல்யாணை வைத்து ‘புரோ’ என்கிற பெயரில் ரீமேக் செய்தார். அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: தந்தையை சந்தித்த விஜய்! வைரல் புகைப்படம்
Advertisement
இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி புரோ படத்திற்காக சமுத்திரக்கனியை பாராட்டியதுடன் அவர் இயக்கத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், சிரஞ்சீவி - சமுத்திரக்கனி கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.