இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படம்... இவர்தான் நாயகனா?
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ராஜாவாக நடிக்கும் நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.
இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பெரிய கவனத்தையும் பெறுகின்றன.
இந்நிலையில், நீண்ட நாள்களாக இளையராஜா தன் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்காக முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து திரைக்கதையை எழுதி வருவதாகவும் இப்படத்தை இயக்குநர் பால்கி இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
Advertisement
Advertisement
தற்போது, இப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. காரணம், இளையராஜா தனிப்பட்ட முறையிலேயே தனுஷின் நடிப்புத் திறனை விரும்புகிறவராம்.
மேலும், ராஜாவாக நடிக்க தனுஷின் தோற்றமும் சரியாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்.
இதையும் படிக்க: 4 தேசிய விருதுகளைப் பெற்ற பாலிவுட் கலை இயக்குநர் தற்கொலை!
இந்தாண்டு இறுதியில் இளையராஜா பயோபிக் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.