முகப்பு
செய்திகள்

மாவீரன் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட், 2023 at 12:45 PM
பகிர்:

மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாவீரன்.

திரையரங்குகளில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல விமரிசனங்களைப் பெற்றது.

Advertisement

தற்போது, சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் ஆகஸ்ட் 11  ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இப்படம் வெளியான 11 நாள்களில் உலகளவில்  ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.