கிக் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
சந்தானம் நடிப்பில் உருவான ‘கிக்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்திருந்த அவருடைய 15-வது படமான ‘கிக்’ படத்தை லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்கியிருந்தார்.
இதையும் படிக்க: ஜெயிலர் வெற்றி - நெல்சனுக்கு வாழ்த்து சொன்ன விஜய்!
Advertisement
Advertisement
தாராள பிரபு படத்தில் கதாநாயகியாக நடித்த தான்யா ஹோப் இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும், பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி போன்றோரும் நடித்துள்ளனர். இசை - அர்ஜுன் ஜன்யா.
இந்நிலையில், இப்படம் வருகிற செப்.1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.