FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வைரலாகும் சிவகார்த்திகேயனின் சிக்ஸ் பேக் புகைப்படம்?

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்துள்ளதாக புகைப்படம் சமூக வலைதளத்தில் உலவி வருகின்றன. 

2 பிப்ரவரி 2024, 5:18 pm
பகிர்:

சமீபத்தில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. ரூ.90 கோடி அளவில் வசூலிலும் கலக்கியது குறிப்பிடத்தக்கது. 

தற்போது சிவகார்த்திகேயனின் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் படத்திற்கு கிடைத்த வெற்றியினால் சாய் பல்லவிக்கு தென்னிந்தியா முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்நிலையில் படத்தில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்துள்ளதாக புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தயாரிப்பு நிறுவனம் அந்த படங்களுக்கு காப்புரிமை கோரி நீக்கிவிட்டதாக ட்விட்டரில் சினிமா டிரேட் அனலிஸ்ட் ஒருவர் கூறியுள்ளார். 

ஏற்கனவே மாவீரன் இசை வெளியீட்டு மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன் நல்ல உடற்கட்டுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைக்கு குல்லா அணிந்திருப்பார். எனவே ‘எஸ்கே 21’ படத்தில் புதிய தோற்றம் நிச்சயம் என அவரது  ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 

தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து  வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படம் ஆக.15ஆம் நாளன்று அதிகாரபூர்வமாக வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.