காவாலா பாடலுக்கு நடனமாடிய ஜப்பான் தூதர்!
ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அசத்தலாக நடனமாடி வைரலாகியுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.
இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் இடம்பெற்று உலகளவில் பிரபலமடைந்த காவாலா பாடலுக்கு பலரும் நடனமாடி விடியோவை வெளியிட்டனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கேப்டன் மில்லர் - வில்லனாக சிவ ராஜ்குமார்!
இந்நிலையில், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுஸுகி, ‘ரஜிகாந்த்தின் மீதான என் அன்பு எப்போதும் தொடரும்’ என காவாலா பாடலுக்கு நடனமாடிய விடியோவைப் பகிர்ந்துள்ளார். தற்போது, இது வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.