ரஜினி - த.செ.ஞானவேல் படத்தின் தலைப்பு இதுவா?
ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்தின் தலைப்பு குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் வெளியான ஒரு வாரத்தில் உலகளவில் ரூ.375 கோடி வசூலித்துள்ளது. அடுத்ததாக, ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: சந்திரமுகி - 2 படத்தில் 10 பாடல்கள்!
Advertisement
Advertisement
ஆனால், ரஜினி இமயமலைப் பயணத்தில் இருப்பதால் அவர் சென்னை திரும்பியதும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்திற்கு ‘வேட்டை’ எனப் பெயரிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.