முகப்பு
செய்திகள்

நடிகர் சிரஞ்சீவியின் 157வது படம் அறிவிப்பு! 

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 157வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட் 2023, 5:13 pm IST
பகிர்:

தெலுங்கில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளினை முன்னிட்டு அவரது 157வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சார்யா படத்தில் இரட்டை வேடங்களில் நடித்த சிரஞ்சீவிக்கு அந்தப் படம் தோல்வியை தந்தது. இதையடுத்து தமிழ் இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர் என்ற படத்தில் நடித்தார். அது ஓரளவுக்கு வெற்றியை பெற்று தந்தது. வால்ட்டர் வீரய்ய படமும் சொதப்பிய நிலையில் அஜித்தின் வீரம் படத்தினை ரீமெக் செய்து போலா ஷங்கர் படம் சமீபத்தில் வெளியானது.  

Advertisement

Advertisement

இந்நிலையில் அவரது 68வது பிறந்தநாளினை முன்னிட்டு ‘மெகா 157’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டு புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது. 

யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை இயக்குகிறார் வசிஷ்டா. இவர் 2022இல் வெளியான பிம்பிசாரா எனும் படத்தினை இயக்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.