லியோ இசை வெளியீட்டுத் தேதி இதுதானா?
லியோ இசைவெளியீட்டு விழா நடைபெறும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | வசூல் வேட்டைக்குக் காத்திருக்கும் துல்கர் சல்மான்!
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா முதலில் மதுரையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. பின், மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டனர். ஆனால், சில காரணங்களால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது.
இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ இசைவெளியீட்டு விழாவை செப்டம்பர் - 23 ஆம் தேதி நடத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.