முகப்பு
செய்திகள்

ஓடிடியில் வெளியானது பீட்சா 3

இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் நடித்துள்ள பீட்சா 3 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Updated On : 24 ஆகஸ்ட் 2023, 3:45 pm IST
பகிர்:

இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் நடித்துள்ள பீட்சா 3 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பீட்சா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் நடிகர் அஸ்வின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பீட்சா 3. இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாரயணன் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

பீட்சா 3 திரைப்படம் கடந்த ஜூலை 28 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி, கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், பீட்சா 3 திரைப்படம் சிம்பிளி செளத்(Simply South) ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments