முகப்பு
செய்திகள்

டிடி ரிட்டன்ஸ் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:54 AM
பகிர்:

நடிகர் சந்தானம், சுரபி நடிப்பில் வெளியாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். 

சந்தானத்தின் மூன்றாவது பேய்ப் படமாக உருவான டிடி ரிட்டன்ஸ் கடந்த ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.

இந்த நிலையில், டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற செப்.1 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.