இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கேப்டன் மில்லர்!
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | வணங்கான் தயாரிப்பு உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!
கேப்டன் மில்லரில் தனுஷின் அண்ணனாக வரும் சிவராஜ் குமார், படத்தின் முக்கிய வில்லனாக இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் இரண்டு வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.