முகப்பு
செய்திகள்

அரசியல் பின்னணியில் உருவாகும் தனுஷ் - 51!

தனுஷ் - சேகர் கமூலா கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Updated On : 30 ஆகஸ்ட் 2023, 11:48 am IST
பகிர்:

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

ராயர் என்கிற தலைப்பில்(தகவல்) உருவாகவுள்ள இப்படத்தில் தனுஷ் வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இதனைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்தில் தன் 51-வது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனா, முக்கியக் கதாபாத்திரத்தில் நாகர்ஜூனா ஆகியோர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமா படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படம் 1980-களில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் பின்னணியில் உருவாகும் படமாக இருக்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments