முகப்பு
செய்திகள்

லோகேஷ் கனகராஜ் - விஜய் குமார் கூட்டணியின் ‘ஃபைட் கிளப்’ டீசர் அப்டேட்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிகர் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’  படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

Updated On : 2 டிசம்பர் 2023, 12:26 pm IST
பகிர்:

லோகேஷ் கனகராஜ் இயக்கிய  லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது, லோகேஷ் நடிகர் ரஜினிகாந்த்தின் ‘தலைவர் 171’ படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். 

இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் ஜி-ஸ்குவாட் (G-squad) என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படங்களை தயாரிக்கவுள்ளதாகக் கூறியிருந்தார். 

Advertisement

Advertisement

லோகேஷ் கனகராஜ், உறியடி விஜய் குமார் படத்தினை தனது முதல் படமாக அறிவித்துள்ளார். இப்படத்திற்கு ‘ஃபைட் கிளப்’ எனப் பெயரிட்டுள்ளனர். அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார், லோகேஷ் கனகராஜ்ஜின் நீண்ட நாள் நண்பர். உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகுமென படக்குழு டெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments