மணிகண்டனின் லவ்வர் படத்தின் முக்கிய அறிவிப்பு
லவ்வர் படத்தின் முக்கிய அறிவிப்பை நடிகர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார்.
லவ்வர் படத்தின் முக்கிய அறிவிப்பை நடிகர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார்.
காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார்.
தற்போது, மணிகண்டன் 'லவ்வர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இப்படத்தில் கெளரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மில்லியன் டாலர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இதையும் படிக்க: கரோனா தொற்றால், புதிதாக 656 பேர் பாதிப்பு!
இந்த நிலையில், லவ்வர் படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளதாக நடிகர் மணிகண்டன் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.