FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நயன்தாரா நடிக்கும் புதிய படங்கள்!

2022-ல் நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், ஓ 2, காட்ஃபாதர், கோல்ட், கனெக்ட் என ஐந்து படங்கள் வெளியாகின.

7 பிப்ரவரி 2024, 11:53 am
படம் - www.instagram.com/wikkiofficial/
பகிர்:

நயன்தாரா நடிக்கவுள்ள இரு புதிய படங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

2022-ல் நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், ஓ 2, காட்ஃபாதர், கோல்ட், கனெக்ட் என ஐந்து படங்கள் வெளியாகின. 2019-ல் ஏழு படங்களும் 2020-ல் இரு படங்களும் 2021-ல் நான்கு படங்களும் வெளியாகின. தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் மற்றும் அட்லி இயக்கத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக ஜவான் என இரு படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நயன்தாரா அடுத்து நடிக்கவுள்ள இரு புதிய படங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. மித்ரன் ஜவஹர் மற்றும் மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிகிறது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி படத்திலும் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்திலும் நயன்தாரா ஏற்கெனவே நடித்திருந்தார். இரு படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.