விஜய் 67-ல் இணையும் ’விக்ரம்’ பட நடிகை!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜய் 67 திரைப்படத்தில் விக்ரம் பட நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜய் 67 திரைப்படத்தில் விக்ரம் பட நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் விஜய் 67. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ’ஜான்வி கபூர் தமிழில் ஒப்பந்தமாகவில்லை..’: போனி கபூர்
மேலும், இப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு தனிவிமானம் மூலம் ஸ்ரீநகர் சென்றது.
இந்நிலையில், காஷ்மீர் சென்ற படக்குழுவில் விக்ரம் படத்தில் ‘ஏஜெண்ட் டீனா’-வாக நடித்த நடிகை வசந்தியும் இடம்பெற்றுள்ளதால் ‘விஜய் 67’ல் அவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் விக்ரம் படத்தில் இறந்துவிடுவதால் ‘விஜய் 67’ விக்ரம் படத்தின் காலகட்டத்திற்கு முந்தைய கதையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் தகவல் பரவி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.