முகப்பு
செய்திகள்

‘கீதா கோவிந்தம்’ இயக்குநருடன் மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா! 

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 13வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி 2023, 3:24 pm IST
பகிர்:

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. இவரது 13வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

2019இல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. நானி நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 

விஜய் தேவரகொண்டா காவலதிகாரியாக நடிக்கும் அந்தப் படம் அவரது 12வது படம் என்பதால் ‘விடி12’ என தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், 13வது படம் (விடி13) குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 2018இல் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இந்திய அளவில் பிரபலமானது. இதில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழ் மற்றும் தெலுங்கில் அமோக வரவேற்பு கிடைத்தது. பரசுராம் பெட்லா என்பவர் இயக்கியிருந்தார்.

மீண்டும் இந்த இயக்குநருடன் விஜய் தேவரகொண்டா இணைந்துள்ளார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். விரைவில் மற்ற விவரங்கள் அறிவிக்கப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.