முகப்பு
செய்திகள்

முடியும் முன்பே 2 மொழிகளில் எடுக்கப்பட்டுவரும் தமிழ் சீரியல்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடர் இரு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. 

Updated On : 13 பிப்ரவரி 2023, 9:59 pm IST
பகிர்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடர் இரு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நினைத்தாலே இனிக்கும் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் பொம்மி - சித்தார்த் என்ற முதன்மைப் பாத்திரங்களில் ஸ்வாதி சர்மா, ஆனந்த் செல்வன் நடித்து வருகின்றனர். 

இனிப்பு வகைகளைச் சுட்டு விற்பனை செய்யும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண், இனிப்பு வகைகளைக் கொண்டு வணிகம் செய்யும் செல்வந்தர் வீட்டு மகனை திருமணம் செய்துகொள்கிறார். அவர் அங்கு சமாளிக்கும் சவால்கள் நினைத்தாலே இனிக்கும் தொடரின் மூலக்கதை.

இந்தத் தொடர் பெங்காளி மொழியில் 'மிதாய்' என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒளிபரப்பு முழுமையாக முடியும் முன்பே தமிழில் நினைத்தாலே இனிக்கும் என்ற பெயரில் மறு உருவாக்கம் (ரீ-மேக்) செய்யப்பட்டு வருகிறது. 

தமிழில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ஒடியா மற்றும் ஹிந்தி மொழிகளில் இந்த தொடர் தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2021 செப்டம்பர் முதல் 'ஜிலி' என்ற பெயரில் ஒடியாவிலும், 2022 ஏப்ரல் முதல் 'மிதாய்' என்ற பெயரில் ஹிந்தி மொழியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments