பதான் இந்திய வசூல் இவ்வளவா?
ஷாருக்கானின் பதான் திரைப்படத்தின் இந்திய வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருக்கானின் பதான் திரைப்படத்தின் இந்திய வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 270 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.
பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
Advertisement
உலகம் முழுவதும் இதுவரை பதான் திரைப்படம் ரூ.950 கோடிக்கும் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் இந்தியாவில் ரூ.500 கோடிக்கும் வசூலித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கேஜிஎஃப் 2 திரைப்படம் ஹிந்தியில் ரூ.432 கோடியை வசூலித்திருந்தது. தற்போது, கேஜிஎஃப் 2 சாதனையை முறியடித்துள்ளது பதான்!