எம்எல்எஸ்: நடப்பு சீசனில் தங்கக் காலணி விருதை வெல்வாரா மெஸ்ஸி?
எம்எல்எஸ் தொடரில் நடப்பு சீசனில் தங்கக் காலணி விருதை மெஸ்ஸி தக்கவைப்பாரா என்பது குறித்து...
அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் கால்பந்துத் தொடரில் நடப்பு சீசனில் தங்கக் காலணி விருதை மெஸ்ஸி தக்கவைப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எம்எல்எஸ் கால்பந்துத் தொடரில் ஒரு சீசனுக்கு மொத்தமாக 34 போட்டிகள் நடைபெறும். நடப்பு சீசனில் 33 போட்டிகள் முடிந்துள்ளன. தற்போதைக்கு மெஸ்ஸியே இதில் முதலிடம் வகிக்கிறார்.
மீதமிருக்கும் ஒரு போட்டி முடிவடைந்ததும் இந்த விருதுக்கான பெயர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பதும் கவனிக்கத்தக்கது.
Advertisement
Advertisement
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணியில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் இதுவரை மெஸ்ஸி 26 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.
பீட்டர் மூஸா 22 கோல்களுடன் இரண்டாமிடத்திலும் 20 கோல்களுடன் பிரையன் ஒயிட் மூன்றாமிடத்திலும் இருக்கிறார்கள். ஒரே போட்டியில் இவர்கள் 5 அல்லது 7 கோல்கள் அடிப்பது மிகவும் கடினமானது என்பதும் கவனிக்கத்தக்கது.
அதிக அசிஸ்ட் செய்தவர்களில் 17 அசிஸ்ட்டுடன் எவாண்டர் டா சில்வா ஃபெரேரா, பெப் பியல் முதலிடம் வகிக்க, மெஸ்ஸி 16 அசிஸ்ட்டுடன் இரண்டாமிடம் வகிக்கிறார்.
அதிக ஷாட்டுகள், அதிக முறை இலக்கை அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸியே முதலிடம் வகிக்கிறார். கடைசி போட்டியில் இன்டர் மியாமி நவ.8ஆம் தேதி சார்லேட் உடன் மோதுகிறது.
கடந்த சீசனில் தங்கக் காலணி வென்ற மெஸ்ஸி இந்த முறையும் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் எம்எல்எஸ் கோப்பை வென்ற இன்டர் மியாமி மீண்டும் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.