தன் ’வாத்தி’யுடன் மோதும் தனுஷ்!
தனுஷின் ‘வாத்தி’ திரைப்படமும் செல்வராகவனின் பகாசூரனும் ஒரேநாளில் வெளியாக உள்ளன.
தனுஷின் ‘வாத்தி’ திரைப்படமும் செல்வராகவனின் பகாசூரனும் ஒரேநாளில் வெளியாக உள்ளன.
'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' வெற்றிப் படங்களுக்கு பிறகு தனுஷ் வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
'வாத்தி' திரைப்படம் நாளை பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகிறது. மேலும், அதேநாளில் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான ‘பகாசூரன்’ படமும் வெளியாகிறது. நாயகர்களாக அண்ணன் - தம்பி முதல்முறையாக நேருக்கு நேர் மோதிக்கொள்வது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி?
சமீப காலமாக செல்வராகவன் நடிகராக பல படங்களில் நடித்துவருகிறார். தனுஷை நாயகனாக அறிமுகப்படுத்திய செல்வராகவன் தனுஷ் படத்துடன் நாயகனாகவே மோதிக்கொள்வது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.