'இதனால்தான் நண்பா நீங்கள் தளபதி..’ விஜய்க்கு ஷாருக் கான் நன்றி
நடிகர் ஷாருக் கான் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாருக் கான் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் - பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இசை - விஷால் & ஷேகர்.
2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து வெளியாகவுள்ள படம் பதான்.
Advertisement
Advertisement
இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 190 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.
பதான் படம் 2023 ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: யார் நம்பர்.1? போனி கபூர் அதிரடி பதில்!
இந்நிலையில், இன்று பதான் படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஷாருக்கான் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘மிக்க நன்றி நண்பா.. இதனால்தான் நீங்கள் தளபதி. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.