FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மும்பையில் ஆட்டோ ஓட்டிய பிரிட்டன் இளவரசர்!

மும்பையில் பிரிட்டன் இளவரசர் வில்லியம் ஆட்டோ ஓட்டியது பற்றி...

10 வினாடிகள் முன்பு
மும்பையில் ஆட்டோ ஓட்டிய பிரிட்டன் இளவரசர் - PTI
பகிர்:

மும்பை பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் இளவரசா் வில்லியம், ஆட்டோ ஓட்டிய விடியோக்கள் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உலகின் முன்னணி சுற்றுச்சூழல் விருதாகக் கருதப்படும் ‘எா்த்ஷாட்’ விருது 2026-ஐ வென்றவா்களின் பெயா்களை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விருது பெறுபவர்களின் பெயர்களை அறிவிப்பதற்காக பிரிட்டன் இளவரசா் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் மூன்று நாள்கள் பயணமாக திங்கள்கிழமை மும்பை வந்தனர்.

இரண்டாவது நாள் நிகழ்வாக, மும்பையில் உள்ள பந்த்ரா ரெக்லமேஷன் பூங்காவில் எா்த்ஷாட் விருதுக்கான 15 இறுதிப் போட்டியாளர்களை இன்று சந்தித்தனர்.

அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பரிசுக்கு இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள இரு இறுதிப் போட்டியாளர்களில் ஒன்றான 'மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி' நிறுவனத்தின் மின்சார ரிக்ஷாவில் இளவரசா் வில்லியம் தம்பதி பயணித்தனர்.

இளவரசா் வில்லியம் ஆட்டோவை ஓட்டிய நிலையில், கேட் மிடில்டன் பின் இருக்கையில் அமர்ந்து அந்தப் பயணத்தை ரசித்தார்.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து இளவரசா் வில்லியம் நேற்று கிரிக்கெட் விளையாடினார். பின்னர், வில்லியம் தம்பதி மும்பை மெட்ரோ ரயிலில் பயணித்தனர்.

பில்லிப்பின்ஸில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாளை தில்லி திரும்பியவுடன் அவரை இளவரசர் வில்லியம் சந்திக்கவுள்ளார்.

summary

Britain Prince William drives an auto-rickshaw in Mumbai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.