சிறார் வன்கொடுமை விவகாரம்! பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மாமனார் கைது!
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மாமனார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மாமனார் சிறார் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய மகனான இளவரசர் ஹாரி, அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மார்க்கலை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், சிறார் வன்கொடுமை சார்ந்த புகைப்படங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், மேகன் மார்க்கலின் தந்தையான தாமஸ் மார்க்கலை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண அதிகாரிகள் இன்று (நவ. 6) கைது செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
பிலிப்பின்ஸ் நாட்டிலுள்ள தாமஸின் வீட்டை காலி செய்தபோது, அவர் சிறார் வன்கொடுமை தொடர்பான புகைப்படங்களை அங்கு வைத்திருந்ததை, மேகன் மார்க்கலின் சகோதரர் கண்டெடுத்துள்ளார்.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியதைத் தொடர்ந்து, தற்போது தாமஸ் மார்க்கல் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முன்னதாக, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கலின் திருமணத்தில் அவரது தந்தை தாமஸ் பங்கேற்காதது அப்போது பெரும் பேசுபொருளானது.
குடும்பத்தை விட்டு பிரிந்து பிலிப்பின்ஸ் நாட்டில் வசித்து வந்த தாமஸ் மார்க்கல், உடல் நலக் குறைவின் காரணமாக நிகழாண்டில் (2026) மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பினார்.
இதையடுத்து, பிலிப்பின்ஸில் அவர் வசித்து வந்த வீட்டில் ஆயிரக்கணக்கான சிறார் வன்கொடுமை புகைப்படங்கள் மற்றும் அதுசார்ந்த பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் அதிகாரிகளிடம் புகாரளித்தது குறிப்பிடத்தக்கது.