மும்பையில் சச்சினுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசர்!
மும்பையில் பிரிட்டன் இளவரசர் வில்லியம் கிரிக்கெட் விளையாடியது பற்றி...
மும்பை பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் இளவரசா் வில்லியம், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து சாலையில் பெண் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடினார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உலகின் முன்னணி சுற்றுச்சூழல் விருதாகக் கருதப்படும் ‘எா்த்ஷாட்’ விருது 2026-ஐ வென்றவா்களின் பெயா்களை அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விருது பெறுபவர்களின் பெயர்களை அறிவிப்பதற்காக பிரிட்டன் இளவரசா் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் மூன்று நாள்கள் பயணமாக மும்பை வந்துள்ளனர்.
மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிரிட்டன் இளவரசர் வில்லியம், பாலார்டு எஸ்டேட்டில் இன்று காலை பெண் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.
அப்போது, சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் பிடிக்க, வில்லியம் பந்துவீசி மகிழ்ந்தார். இந்த நிகழ்வின் போது அவரது மனை கேத் மிடில்டனும் உடனிருந்தார்.
இந்தப் பயணத்தின்போது பல்வேறு துறைகளில் பிரிட்டன்-இந்தியா இடையேயான ஒத்துழைப்பை கொண்டாடும் விதமாக மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இளவரசா் வில்லியம் பங்கேற்கவுள்ளார்.
பில்லிப்பின்ஸில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்று தில்லி திரும்பிய பின்னா், அவரை வருகின்ற புதன்கிழமை இளவரசா் வில்லியம் சந்திக்கவுள்ளார்.