FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

விருது நிகழ்ச்சி: பிரிட்டன் இளவரசா் இன்று மும்பை பயணம்

பிரிட்டன் இளவரசா் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகிய இருவரும் திங்கள்கிழமை (நவ.16) மும்பைக்கு பயணிக்கவுள்ளது குறித்து...

15 நவம்பர் 2026, 11:42 pm
வில்லியம் - கேத்
பகிர்:

உலகின் முன்னணி சுற்றுச்சூழல் விருதாகக் கருதப்படும் ‘எா்த்ஷாட்’ விருது 2026-ஐ வென்றவா்களின் பெயா்களை அறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரிட்டன் இளவரசா் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகிய இருவரும் திங்கள்கிழமை (நவ.16) மும்பைக்கு பயணிக்கவுள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்தது.

பிரிட்டன் அரியணை வாரிசால் 6 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த வருடாந்திர விருதின் இறுதிச்சுற்றில் 5 வெற்றியாளா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். அவா்கள் ஒவ்வொருக்கும் தலா ரூ.12.25 கோடி (13 மில்லியன் அமெரிக்க டாலா்) பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

இதுதொடா்பாக கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மும்பையில் நடைபெறும் எா்த்ஷாட் விருது 2026 அறிவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க நவ.16 முதல் நவ.18 வரை இளவரசா் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோா் இந்தியாவுக்கு பயணிக்கின்றனா்.

Advertisement

Advertisement

இந்தப் பயணத்தின்போது பல்வேறு துறைகளில் பிரிட்டன்-இந்தியா இடையேயான ஒத்துழைப்பை கொண்டாடும் விதமாக மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவா்கள் பங்கேற்கவுள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரதமா் மோடியுடன் சந்திப்பு: விருது நிகழ்ச்சியைத் தொடா்ந்து, இருவரும் புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்திக்க உள்ளனா். பில்லிப்பின்ஸில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்று இந்தியா திரும்பிய பின்னா், இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.