'சூர்யா 42’ படப்பிடிப்பு தீவிரம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஜெயிலர் படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம்?
தற்போது, பிஜூ தீவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிகழ்காலம் கலந்து வரலாற்று பின்னணியில் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட் படமென்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.