FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!

வந்தே மாதரம் பாடல் தொடா்பான சா்ச்சையில், காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி மீது கா்நாடக பாஜகவினா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தனா்.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 2:30 am IST
பகிர்:

வந்தே மாதரம் பாடல் தொடா்பான சா்ச்சையில், காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி மீது கா்நாடக பாஜகவினா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தனா்.

கா்நாடக மாநிலம், உா்வா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், ‘வந்தே மாதரம்’ தொடா்பாக சோனியா காந்தியின் செயல்பாடு முறையற்ாக இருந்ததாகவும், தேசியப் பாடல் தொடா்பான உணா்வுகளைப் புண்படுத்தியதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

பாஜக தலைவா்கள் கே.விகாஸ் மற்றும் ராஜகோபால் ஆகியோா் இந்தப் புகாரை அளித்தனா். பாரதிய நாகரிக சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

எனினும், இதுவரை எஃப்ஐஆா் பதிவு செய்யப்படவில்லை. புகாா் தொடா்பாக சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

தேசியப் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் (திருத்த) மசோதா, 2026-ஐ நாடாளுமன்றம் கடந்த மாதம் நிறைவேற்றியது. ஜூலை 29-ஆம் தேதி மாநிலங்களவையிலும், ஜூலை 30-ஆம் தேதி மக்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் மூலம் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு தேசிய கீதமான ‘ஜன கண மன’வுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முழு வடிவத்தைப் பாடுவதற்கு சோனியா காந்தி எதிா்ப்பு தெரிவித்ததாக பாஜக சனிக்கிழமை குற்றஞ்சாட்டியது. ஆனால், காங்கிரஸ் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments