வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்துவிட்டதாக சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளது குறித்து...
வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அவமதித்துவிட்டதாக மேற்கு வங்க மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி இன்று (ஆக. 16) விமர்சித்தார்.
காங்கிரஸின் செயலால் ஒட்டுமொத்த வங்கதேசமும் கொத்துத்துக்கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் கட்சி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நேற்று சுதந்திர தினவிழாவில் கொடியேற்றுவதற்கு முன்பு வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவிடம் சைகை செய்தார். பின்னர் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடி முடிக்கப்பட்ட பின்னர், கார்கே, தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அவமதித்துவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக மேற்கு வங்கத்தில் செய்தியாளர்களுடன் சுவேந்து அதிகாரி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் செயலால் ஒட்டுமொத்த வங்கதேசமும் கொதித்துக்கொண்டிருக்கிறது. வந்தே மாதரம் பாடலை அவமதித்ததற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். சோனியா காந்தி வந்தே மாதரம் பாடலை அவமதித்துவிட்டார் எனப் பேசினார்.
Congress must apologise over Vande Mataram row CM Suvendu Adhikari
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.