காங்கிரஸ் அலுவலகத்தில் முழுமையாகப் பாடப்பட்ட வந்தே மாதரம்! சோனியா, கார்கே அதிர்ச்சி!
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடல் முழுவதுமாகப் பாடப்பட்டது குறித்து...
தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் வந்தே மாதரம் பாடல் முழுவதுமாகப் பாடப்பட்டது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
நாட்டின் சுதந்திர நாள் இன்று (ஆக. 15) பல்வேறு மாநிலங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களின் தலைமை அலுவலகங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
தில்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
அப்போது, நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம் முழுவதுமாகப் பாடப்பட்டதால் நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனியா காந்தி, கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி மற்றும் கார்கே ஆகியோர் ஆவேசமாகப் பேசும் விடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
முன்னதாக, வழக்கமாக வந்தே மாதரம் பாடலில் முதல் 2 பத்திகள் மட்டுமே பாடப்பட்டு வந்த நிலையில், அப்பாடலை முழுவதுமாகப் பாட வேண்டுமென மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
The singing of the 'Vande Mataram' song in its entirety at the Independence Day celebration held at the Congress headquarters in Delhi has become a major topic of discussion.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.